india

img

ரூ. 1500 கோடி இழப்பு சந்தித்த காஷ்மீர் சுற்றுலாத்துறை... கொரோனா ஊரடங்கால் 4 லட்சம் பேர் வேலையிழப்பு....

ஜம்மு:
கொரோனா ஊரடங்கு காரணமாக ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சுற்றுலாத் துறை மட்டும் சுமார் 1500 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்து உள்ளது.இதனை வாழ்வாதாரமாக நம்பிநேரடியாக 4 லட்சம் பேரும் மறைமுகமாகப் பல லட்சம் பேரும் உள்ள நிலையில், அவர்கள் கொரோனா ஊரடங்கால் வேலை மற்றும் வருவாய் இழப்புக்கு உள்ளாகியுள்ளனர்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் முக்கியத் தொழில்களில் ஒன்றாக சுற்றுலாத் துறை விளங்குகிறது. காஷ்மீர் மாநிலத்தின் ஜிடிபி-யில் சுமார் 8 சதவிகித பங்களிப்பை சுற்றுலாத்துறை கொண்டிருக்கிறது. 

ஆனால், காஷ்மீருக்கு சிறப்பு உரிமை வழங்கும் பிரிவு 370 நீக்கம், தலைவர்கள் சிறையில் அடைப்பு, 144 தடை ஆகியவற்றால் காஷ்மீரின் சுற்றுலாத்துறை 2019 ஆகஸ்டில் கடும் பாதிப்புக்கு உள்ளானது. இந்த நிலைமை சற்று மேம்படும் நேரத்தில் 2020 மார்ச்சில் நாடு தழுவிய பொதுமுடக்கம் அறிவிக்கப்படவே, சுற்றுலாத்துறை செயல்பாடுகள் மறுபடியும் முடங்கின.அதன்பிறகு, கடந்த 2021 ஜனவரிமுதல் சரிவிலிருந்து ஜம்மு - காஷ்மீர்சுற்றுலாத்துறை மீண்டது. ஹோட்டல்கள்முழுமையாக புக்கிங் ஆயின. புகழ் பெற்ற ‘தால்’ ஏரி, சுற்றுலா படகோட்டிகள் சிறிதுநேரம் கூட ஓய்வெடுக்க முடியாத அளவிற்கு பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது.ஆனால், கொரோனா 2-ஆம் அலைஊரடங்கு காரணமாக, கடந்த ஏப்ரல்முதல் ஜம்மு-காஷ்மீரின் சுற்றுலாத் துறை மீண்டும் முடங்கி விட்டது. தால்ஏரி, குல்மார்க், சோன்மார்க், பெஹ்லகம்போன்ற இடங்கள் வெறிச்சோடி காணப் படுகின்றன. தங்கும் விடுதிகளும் காற்றாடுகின்றன. உட்காரக் கூட நேரம்இல்லாமல் இருந்த சுற்றுலா படகோட்டிகள், தற்போது வாடிக்கையாளருக்காக வாரக்கணக்கில் காத்துக் கிடக்கின்றனர். கொரோனா முதல் அலைக்குப் பிறகு சுற்றுலாத் தொழில் சிறப்பாக இருந்தது. கூட்டம் கூட்டமாக சுற்றுலாப்பயணிகள் வந்து சென்றனர். முழுக் கோடைக்காலத்திற்கும் சுற்றுலா பயணிகள் தங்களின் வருகையை முன்பதிவு செய்திருந்தார்கள், ஆனால். அனைத் தும் போய்விட்டது என்று காஷ்மீர் ஐக்கிய சுற்றுலா மன்றத்தின் உறுப்பினர் மன்சூர் பக்தூன் வேதனை தெரிவிக்கிறார்.

“குளிர்கால சுற்றுலா இங்கு மிகவும் வெற்றிகரமாக இருந்தது. நாங்கள் பல சாலை நிகழ்ச்சிகளை மேற்கொண்டோம். பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் பல விழாக்களை ஏற்பாடு செய்தோம். எங்கள் குளிர்கால சுற்றுலா மிகவும் வெற்றிகரமாக இருந்தது, ஆனால் கொரோனா 2-ஆவது அலை, இவைஅனைத்தையும் முடிவுக்கு கொண்டுவரும் என்ற நாங்கள் எதிர்பார்க்கவில்லை’ என்று சுற்றுலாத் துறை இயக்குநர் ஜி.என். இட்டூவும் கவலை தெரிவிக்கிறார்.இந்நிலையில், சீசன் காலமான கடந்த 2 மாதத்தில் மட்டும் காஷ்மீர் சுற்றுலாத்துறை 1500 கோடி ரூபாய் வரை இழப்பை சந்தித்து இருப்பதாக, அந்தத்துறையைச் சேர்ந்தவர்கள் மதிப்பிட் டுள்ளனர்.

;